திருப்பூர் : திருப்பூர் அருகே கடன் தொல்லையால் மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் அருகே பெருந்தொழவு கவுண்டம்பாளையம் பகுதியில் அஹமத் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாய கூலி வேலை செய்து வருபவர் சதீஷ்குமார். இவர் தனது மனைவி தவமணி மற்றும் 3-வயது மகள் மோனிகாவுடன் அதே தோட்டத்தில் தங்கி பணியாற்றி வருகிறார். கோவை மாவட்டம் கும்பாலபட்டியில் சதீஷ்குமார் இருந்த போது, கந்து வட்டிக்கு பணம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பி தர கந்துவட்டிகாரர்கள் தொல்லை தந்ததால் மனமுடைந்த சதீஷ்குமார் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தார்.

இதையடுத்து, தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி மாத்திரையை மனைவியுடன் சேர்ந்து விழுங்கி கொண்டு, 3 வயது குழந்தை மோனிகாவை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்து விட்டு, தந்தை சதீஷ்குமாரும் அதே தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில், போராடிக் கொண்டிருந்த தவமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த அவிநாசிபாளையம் போலீசார் சதீஷ்குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.