கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை தாமதப்படுத்துவதற்கு அ.ம.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு 40 நாட்களுக்கு மேலாகியும் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பா.ஜ.க.வும்., அ.தி.மு.க.வும் அரசியல் ரீதியாக கூட்டணி வைத்திருப்பதற்கும், இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. விசாரிப்பதில் ஏற்படும் தாமதத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. அதுவரை இங்குள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்தி வரும் விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பதும் மர்மமாக உள்ளது.
தனக்கு மேல் உளல ஐ.ஜி. அந்தஸ்திலான அதிகார் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பெண் எஸ்.பி. ஒருவர் புகார் கொடுத்து ஓராண்டாகியும், அது தொடர்பாக ஒரு வழக்கை பதிந்து விசாரணை நடத்தாதது மட்டுமின்றி, குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரியை பணியிட மாற்றம் செய்ய எடப்பாடி பழனிசாமியின் அரசு ஆர்வம் காட்டவில்லை.
பெண்கள் பாதுகாப்பில் இந்த அரசு காட்டும் அலட்சியம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொள்ளாச்சி சம்பவத்திலும் இப்படி அலட்சியமாக இருந்து குற்றத்தை மூடி மறைக்க முயலாமல், தற்போது அந்த வழக்கின் விசாரணை யார் வசம் இருக்கிறது..? எந்த நிலையில் இருக்கிறது..? சி.பி.ஐ.க்கு மாற்றுவதில் என்ன நடைமுறை சிக்கல்..? என்பதை எல்லாம், தெளிவுபடுத்தி, காரணம் எதுவாக இருந்தாலும் விரைவான விசாரணைக்கு இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் அரசியல் பின்னணிகள் இருப்பதால், சி.பி.ஐ. நடத்தவுள்ள விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும், இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.