வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட பிரியங்கா காந்திக்கு வாய்ப்பு மறுப்பு : காங்கிரஸ் சார்பில் அஜய் ராஜ் போட்டி

வாரணாசியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அஜய் ராஜை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக இன்று அறிவித்துள்ளது.

வாரணாசியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அஜய் ராஜை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக இன்று அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு நான்காவது கட்டமான வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். பிரமாண்ட பேரணியாக சென்று அவர் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று பா.ஜ.க. அறிவித்துள்ளது. 



இதனிடையே, வாரணாசியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தியை களமிறக்கலாம் என்று பேசப்பட்டது. இந்த தகவலை அக்கட்சி எந்த இடத்திலும் மறுக்கவில்லை. இந்த நிலையில், பிரியங்கா காந்தி போட்டி என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி, கடந்த 2015-ம் ஆண்டு மோடியை எதிர்த்து போட்டியிட்ட அஜய் ராஜ் என்பவரை மீண்டும் இன்று வாரணாசி வேட்பாளராக அறிவித்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...