ஒரு வாக்கு, ஒரு ரூபாய் கேட்கும் சுயேட்சை வேட்பாளர்

கோவை: வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் கொடுத்து வாக்கு கேட்கும் நிலையில், சூலூர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்கு, ஒரு ரூபாய் என வாக்காளர்களிடம் கேட்டு பரப்புரை செய்து வருகிறார்.

கோவை: வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் கொடுத்து வாக்கு கேட்கும் நிலையில், சூலூர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்கு, ஒரு ரூபாய் என வாக்காளர்களிடம் கேட்டு பரப்புரை செய்து வருகிறார்.



சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 19 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் கோவை மாவட்டம் எளச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்ற சமூக ஆர்வலர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு சார்பில், மலரட்டும் அறம் சார்ந்த அரசியல் என்ற முழக்கத்தை முன்வைத்து பிரபாகரன் தேர்தலில் களம் காண்கிறார். இந்நிலையில் பிரபாகரன் தன்னுடைய வேட்புமனு டெபாசிட் தொகையைக் கட்டுவதற்கு மக்களிடமே கையேந்தியிருக்கிறார். டெபாசிட் தொகை ரூபாய் 10,000 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், சூலூர் தொகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தலா 1 ரூபாய் என தந்து டெபாசிட் தொகையைக் கட்டுவதற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பிரபாகரன். வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலமாகவும் மற்றும் பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்தும் நிதி வசூல் செய்து வருகிறார். மேலும் பொதுமக்களுக்கு துண்டறிக்கைகளை வழங்கி தேர்தலில் ஏன் போட்டியிடுகிறேன் என்பதை விளக்கி வாக்கும், ஒரு ரூபாயும் கேட்டு பரப்புரை செய்து வருகிறார். இந்த நிதியை கொண்டு நாளை பிரபாகரன் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.



இதுகுறித்து பேசிய பிரபாகன், 'சூலூர் இடைத்தேர்தலில் ஆள் மாற்றத்திற்காக அதிமுகவும், ஆட்சி மாற்றத்திற்காக திமுகவும் போட்டியிடுகின்றன. ஆனால் அரசியல் மாற்றத்திற்காக நான் போட்டியிடுகிறேன். இடைத்தேர்தலில் ஜனநாயகத்திற்கு பதிலாக பணநாயகமாக மாறிவிட்டதால், வாக்கிற்கு பணம் கொடுக்கும் கட்சிகள் ஊழல் மூலமாக கொள்ளையடித்து வருகின்றன மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் மக்களிடம் ஒரு வாக்கும், ஒரு ரூபாயுமென கேட்டு பரப்புரை செய்து வருகிறேன். நேர்மையாக தேர்தலை சந்திக்கும் நோக்கில் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன், இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. நீராதாரங்களை மேம்படுத்துதல்,ஜவுளி தொழிலை பாதுகாத்தல் ஆகியவற்றை வாக்குறுதிகளாக அளித்து வாக்கு சேகரித்து வருகிறேன்' என தெரிவித்தார்.



பிரபாகன் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், இலஞ்சம், ஊழல் மற்றும் மது உள்ளிட்டவறாறிக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வருகிறார். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்த கோரி 12 நாட்களும், ஜல்லிக்கட்டிற்காக டெல்லியில் 4 நாட்களும் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...