மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம் : உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்கள்

நீலகிரி : மலர் கண்காட்சிக்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுகளில் பல்வேறு மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.


நீலகிரி : மலர் கண்காட்சிக்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுகளில் பல்வேறு மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழாவிற்காக வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக, தோட்டக்கலைத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக, உலக புகழ் பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்துவது வழக்கம். இந்தாண்டு மலர் கண்காட்சி வரும் மே 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்காக , அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு பணிகள் துரித கதியில் நடைப்பெற்று வருகிறது. 



தற்போது, 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பெட்டூனியா, சால்வியா, டேலியா உள்ளிட்ட 90 வகையான மலர்கள் தற்போது பூத்து குலுங்குகிறது. இதேப் போன்று, சால்வியா, டேலியா போன்ற பல வண்ண மலர்களும் பூத்து குலுங்குகின்றன. தற்போது உதகையில் குளுகுளு காலநிலை நிலவுவதாலும், மலர்கள் பூத்து குலுங்குவதாலும் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...