கோவை: நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால், கோவை மாவட்டத்தில் செங்கள் உற்பத்தி செய்யும் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சின்னதடாகம், பெரியாதடாகம், வீரபாண்டி, கணுவாய், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் செங்கற்கள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இத்தொழிலை நம்பி நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஐம்பதாயிரத்திற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், இப்பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான பீகார், ஒடிசா, அசாம் மாநில தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று விட்டனர். இதனால், செங்கல் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
செங்கல் சூளைகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் தீபாவளி மற்றும் தங்களது குடும்ப விழாக்களுக்கு சொந்த ஊர் செல்வது வழக்கம். ஆனால், நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் வடமாநிலங்களில் பெரும் திருவிழா போல் நடப்பதால், அதில் பங்கேற்க பல தொழிலாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, இங்கிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்கான போக்குவரத்து செலவு உள்ளிட்டவைகளை அந்தந்த அரசியல் கட்சியினரே ஏற்றுக்கொள்வதால் பலரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கிளம்பி விட்டனர்.
செங்கல் சூளைகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், சொந்த ஊருக்கு சென்றவர்கள் தேர்தல் பிரச்சாரம், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை முடிவு என அனைத்தும் முடிந்த பின்னரே திரும்புவார்கள் எனத் தெரிகிறது. இதனால், செங்கல் உற்பத்தி பணிகள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. செங்கல் உற்பத்தி பாதிப்பு என்பது ஒட்டு மொத்த கட்டுமானத்தையே பாதிக்க கூடியதாக இருகின்றது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண, தொழில் நகரங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும், என செங்கல் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.