திருப்பூர் : சின்ன வெங்காய அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அதன் கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
திருப்பூர் : சின்ன வெங்காய அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அதன் கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம், கொடுவாய், தாராபுரம், குடிமங்கலம் மற்றும் காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது அறுவடை பணிகள் துவங்கியுள்ளது. ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து உற்பத்தி செய்தபோதும், விலை இறக்கம் காரணமாக கடந்த வாரம் வரை விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை சேமித்து வைத்திருந்து தற்போது விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த மாதம் ரூ.12-க்கு கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் தற்போது 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை வியாபாரிகள் வாங்கி செல்வதால், இந்த விலை உயர்வு ஓரளவு கட்டுபடியாவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சின்ன வெங்காயத்தின் கொள்முதல் விலை ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வரும் நிலையில், உற்பத்தி செய்த சின்ன வெங்காயத்தினை பாதுகாக்க குண்டடம் பகுதியில் சேமிப்பு கிடங்கு ஒன்றை அமைத்தால், உற்பத்தி அதிகமாகும் காலங்களில் சேமித்து வைத்து, பற்றாக்குறை ஏற்படும் போது விற்பனை செய்தால் விலையும் நிலையாக இருப்பதோடு, விவசாயிகளும் நஷ்டம் அடையாமல் இருக்க முடியும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.