சூலூர் தேர்தல் களம்

சூலூர் தொகுதியில் திமுக, அதிமுக கட்சிகள் முதல் முறையாக நேரடியாக மோதும் களமாக இடைத்தேர்தல் அமைந்துள்ளது. முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்போடு திமுகவும், ஆட்சியை தக்க வைக்கும் வாழ்வா, சாவா போராட்டத்தில் அதிமுகவும் மோதுகின்றன.

முதல் முறையாக மோதும் திமுக, அதிமுக

சூலூர் தொகுதியில் திமுக, அதிமுக கட்சிகள் முதல் முறையாக நேரடியாக மோதும் களமாக இடைத்தேர்தல் அமைந்துள்ளது. முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்போடு திமுகவும், ஆட்சியை தக்க வைக்கும் வாழ்வா, சாவா போராட்டத்தில் அதிமுகவும் மோதுகின்றன.

சூலூரில் திமுக

முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற 1952 ம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிடவில்லை. அப்போது சூலூர் தொகுதியும் இல்லை. ஆனால் அடுத்து வந்த 1957 தேர்தலில் சூலூர் தொகுதி உருவாக்கப்பட்டது. முதல் முறையாக தேர்தல் களம் கண்ட திமுக, சூலூர் தொகுதியில் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குழந்தையம்மாள் வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.ரமணி இரண்டாம் இடம் பிடித்தார். 

1962 தேர்தலில் திமுக சூலூர் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டது. திமுக சார்பில் ராசு என்பவர் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி வேட்பாளராக குழந்தையம்மாள் மீண்டும் போட்டியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சின்னையன் என்பவர் போட்டியிட்டார். இந்த தேர்தலில் குழந்தையம்மாள் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சின்னையன் இரண்டாம் இடம் பிடித்தார். பிரஷா சோஷலிஸ்ட் கட்சி வேட்பாளர் குமாரசாமி கவுண்டர் மூன்றாம் இடம் பிடிக்க, திமுக வேட்பாளர் ராசு நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டார். 1967 முதல் பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக இருந்த சூலூர், தொகுதி மறுசீரமைப்பின் போது மீண்டும் உருவாக்கப்பட்டது. 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் சூலூர் தொகுதியில் திமுக, நேரடியாக போட்டியிடவில்லை. இரண்டு முறையும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது. அதேசமயம் அக்கட்சிகளும் தோல்வியை தழுவின. 2011 தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் கொங்குநாடு முன்னேற்ற கழக வேட்பாளர் ஈஸ்வரன், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பனப்பட்டி தினகரனிடம் தோல்வியடைந்தார். அடுத்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சி.மனோகரன், அதிமுக வேட்பாளர் கனகராஜிடம் தோல்வியடைந்தார். தொடர் தோல்விகளை சந்தித்து வரும் திமுக, முதல் வெற்றியை பெறும் முனைப்போடு தேர்தலில் களம் காண்கிறது. திமுக வேட்பாளராக பொங்கலூர் நா.பழனிசாமி போட்டியிடுகிறார்.

சூலூரில் அதிமுக

பழைய சூலூர் தொகுதி இருந்த போது, அதிமுக உருவாக்கப்படவில்லை. சூலூரை உள்ளடக்கிய பல்லடம் தொகுதியில் அதிமுக அதிக வெற்றிகளை ஈட்டியுள்ளது. புதிய சூலூர் தொகுதி உருவாக்கிய பின் நடந்த முதல் தேர்தலில், திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கின.

2011 தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் கொங்குநாடு முன்னேற்ற கழக வேட்பாளர் ஈஸ்வரன், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் பனப்பட்டி தினகரன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 29 ஆயிரத்து 532 வாக்குகள் வித்தியாசத்தில் பனப்பட்டி தினகரன் வெற்றி பெற்றார். அடுத்து வந்த 2016 தேர்தலில் அதிமுக முதல் முறையாக சூலூர் தொகுதியில் போட்டியிட்டது. அதிமுக வேட்பாளர் கனகராஜ் 36 ஆயிரத்து 631 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிட்ட பனப்பட்டி தினகரனுக்கு 4 ம் இடமே கிடைத்தது.

பல்லடம் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட செ.ம.வேலுசாமி சூலூரை சேர்ந்தவர். அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். ஆனால் சூலூர் தொகுதியில் இரண்டு முறையும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 2011 ம் ஆண்டு சூலூர் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. 2014 ஆண்டில் ஒரு விபத்தினால் மேயர் பதவியில் இருந்து செ.ம.வேலுசாமி நீக்கப்பட்டார். செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வந்த அவர், அதன்பின்னர் கட்சியில் ஒரங்கட்டப்பட்டார். அதற்கேற்ப 2016 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த செ.ம.வேலுசாமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த முறையும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மறைந்த சட்டமன்ற உறுப்பினர் கனகராஜின் சகோதாரரும், கோவை புறநகர் மாவட்ட அம்மா பேரவை தலைவருமான கந்தசாமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

சூலூர் பகுதியில் செல்வாக்கு மிக்க செ.ம.வேலுசாமிக்கு பதிலாக கந்தசாமிக்கு வாய்ப்பு அளித்திருப்பது, அதிமுக கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியே காரணமென கூறப்படுகிறது. செ.ம.வேலுசாமிக்கு சீட் வழங்கி எளிதாக பெற வேண்டிய வெற்றியை, கந்தசாமிக்கு சீட் கொடுத்து போட்டியை கடுமையாக்கி உள்ளதாக அதிமுகவினரிடம் பேச்சு அடிபடுகிறது. அதிமுகவில் இருந்து பிளவுப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுக வாக்குகளை பிரிக்கக்கூடும். இதனால் அதிமுக வாக்குவங்கியை பிளவுபடுத்துவதால், வெற்றியை பாதிக்க வாய்புள்ளது. அமமுக சார்பில் முன்னாள் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுகுமார் களமிறக்கப்பட்டுள்ளார். திமுக, அமமுக பலம் வாய்ந்த, மக்கள் அறிந்த முகங்களை வேட்பாளராக களமிறக்கி உள்ள நிலையில், அதிமுக அதிகம் பரிச்சயம் இல்லாத கந்தசாமிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. சூலூர் தொகுதியை வெற்றியை தக்க வைப்பதோடு, ஆட்சியையும் தக்க வைக்க வேண்டுமென்ற முனைப்போடு அதிமுக தேர்தலில் போட்டியிடுகிறது. திமுக, அதிமுக இடையே கடும் போட்டி இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் சூலூரில் தேர்தல் களம் காண்பதால், கடும் போட்டி நிலவுகிறது. 

எப்படி இருப்பினும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...