மருத்துவரின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரம் : மாவட்ட ஆட்சியரின் உறுதியால் கண்ணீரைத் துடைத்து நிம்மதியுடன் சென்ற உறவினர்கள்

கோவை : கோவையில் மருத்துவரின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

கோவை : கோவையில் மருத்துவரின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

கோவை சிவானந்தா காலனி பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ் (38), நிர்மலா (35) தம்பதியினர். நிர்மலா கோவை அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் பிரசவத்திற்காக சுமார் 7 மாதம் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் திலகவதி செவிலியர் நிர்மலாவிற்கு கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள என்.எம். மருத்துவமனையில் வைத்து சிகிச்சை தருவதாக அழைத்துள்ளார். இதையடுத்து, நிர்மலா மேலதிகாரியான மருத்துவர் திலகவதியின் பேச்சை மீற முடியாமல் அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு கடந்த 15ஆம் தேதி காலை ரத்தப் பரிசோதனை மற்றும் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டதில் குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டது தெரியவந்தது. ஆனால், அந்த மருத்துவமனையில் அனுமதித்தக்கப்பட்ட நிர்மலாவின் வயிற்றில் இறந்த நிலையில் இருந்த குழந்தையை வெளியேற்றவில்லை.

பின்னர் அடுத்த நாள் 16-ஆம் தேதி அதிகாலை செவிலியர்கள் நிர்மலாவிற்கு ஊசி மருந்து செலுத்தி உள்ளனர். பின்னர், காலை 10 மணிக்கு வந்த மருத்துவர் திலகவதி அதிக வலியை ஏற்படுத்தக்கூடிய ஊசி மருந்தை கொடுக்கும்படி சொல்லிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, 11.50 மணி அளவில் அதிக வலி ஏற்பட்டுள்ளது. அதேபோல, வலிப்பும் வந்துள்ளது. பின்னர், திலகவதிக்கு தொடர்ந்து அழைத்ததின் பேரில், 12.45 மணிக்கு மீண்டும் வந்தார். பின்னர், அவர் சுமார் 1.30 மணி அளவில் இறந்த குழந்தையை சிகிச்சை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

இதையடுத்து, 2.20 மணி அளவில் மருத்துவர் திலகவதி கணவர் சுரேஷிடம் நிர்மலாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரிவித்தார். பின்னர் 2.40 மணி அளவில் கே.ஜி. மருத்துவமனைக்கு அவசரம் அவசரமாக அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த மருத்துவமனையில் திலகவதியிடம் விசாரித்துவிட்டு நிர்மலாவை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சோதனை செய்துவிட்டு நிர்மலா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர், உடற்கூறாய்வு முடிந்த அடுத்த நாளில் உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம் என கூறி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸ் பேச்சுவார்த்தைக்கு பின் உடலை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசமணியிடம் உயிரிழந்த நிர்மலாவின் கணவர் சுரேஷ் உட்பட உறவினர்கள் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர். மேலும், இந்த புகாரில் நல்ல திடகாத்திரமாக இருந்த எனது மனைவியின் இறப்புக்கு முழு காரணம் மருத்துவர் திலகவதி தான் என குறிப்பிட்டுள்ளனர். மேலும், சரியான சிகிச்சை அளிக்காததாலும், மருத்துவர்கள் யாரும் வந்து உதவாததாலும், மருத்துவர் திலகவதி அரசு மருத்துவமனையில் இருந்து விட்டு தனியார் மருத்துவமனையில் இருக்கும் எங்களுக்கு காலதாமதமாக சிகிச்சை அளித்தாலும், மருந்தின் அளவு அதிகமாக கொடுத்தாலும் தான் என் மனைவி உயிரிழந்துவிட்டார் என குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், புகாரை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் புகார்தாரரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், கண்ணீர் மல்க வந்த உறவினர்களிடம் உங்களின் நியாயமான கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, உறவினர்கள் மாவட்ட ஆட்சியரின் உறுதியை ஏற்று நம்பிக்கையுடன் நியாயம் கிடைக்கும், என சென்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...