நீலகிரியை குளிர வைத்த கோடை மழை : தண்ணீர் பற்றாக்குறைக்கு 'குட் பை'..!

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கோடை மழையின் காரணமாக, நகர் பகுதிகளில் கோடை சீசனுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கோடை மழையின் காரணமாக, நகர் பகுதிகளில் கோடை சீசனுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். கடந்த ஆண்டு வழக்கம் போல் தென்மேற்கு பருவமழை குறித்த காலத்தில் தொடங்கி இடைவிடாமல் நான்கு மாதங்கள் பெய்தது. இதனால், தென்மேற்கு பருவமழையால், அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இந்த தண்ணீர் கடந்த பிப்ரவரி மாதம் வரை இருந்தது. ஆனால், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாத நிலையில், அனைத்து நீர் நிலைகளின் நீர்மட்டம் சரிந்து காணப்பட்டது. 

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், பனியில் கருகி போன தேயிலை செடிகள் துளிர்க்க ஆரம்பித்துள்ளன.



மேலும், தோட்டக்கலைத்துறை சார்பில் கோடை விழாவிற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், போதிய தண்ணீர் இன்றி சிரமப்பட்டு வந்தனர். தற்போது, கோடை மழை பெய்து வருவதால், அனைத்து பூங்காக்களிலும் உள்ள மலர் செடிகளிலும் மலர்கள் பூக்கத் துவங்கியுள்ளன. இதேபோன்று, மேலும் ஓரிரு நாட்கள் மழை பெய்தால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் தண்ணீர் அளவு உயர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நகரப் பகுதிகளில் குடிநீர் பிரச்சினை கோடை விடுமுறை முடியும் வரை இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...