கோவை : சிறுமுகை வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மனித-யானை மோதலை தவிர்ப்பது பற்றி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

கோவையில் பல்வேறு உத்தரவுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டும் மனித - யானை மோதல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இந்த நிலையில், மனித-யானை மோதலை தவிர்க்கும் விதமாக, வனப்பகுதிகளையொட்டி உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு யானைகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ள துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன.
அதில், யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பெத்துக்குட்டையில் உள்ள பவானிசாகர் நீர்தேக்கப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள இடங்களில் நுழையவோ, விவசாயம் செய்யவோ வேண்டாம் என வனத்துறையினரால் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதேபோல, எக்காரணத்தை கொண்டும் வனப்பகுதிகளுக்குள் இருக்கும் சாலைகளை பயன்படுத்த வேண்டாம். அண்மையில், சிறுமுகை பகுதியைச் சேர்ந்தவர்கள் 2 பேர் யானை தாக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும், வனப்பகுதிகளுக்கு ஒட்டிய குடியிருப்புவாசிகள் இரவு நேரப் பயணங்களை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் வீடுகளுக்கு முன்பு விளக்குகளை எரிய விட்டு, யானைகளை ஆத்திரமடையச் செய்ய வேண்டாம்.
ஒருவேளை யானைகள் விவசாய நிலங்களிலோ, குடியிருப்பு பகுதிகளிலோ நுழைந்தால், கற்கள் அல்லது வேறு ஏதேனும் பொருட்களை எரிந்து துரத்த முயற்சி செய்யக் கூடாது. உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், யானைகள் விரட்டும் பணியின் போது பொதுமக்கள் யானையை சுற்றி நிற்பதை தவிர்க்க வேண்டும். அதோடு, தேவையற்ற வகையில் ஒலி எழுப்புவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். குறிப்பாக, விவசாய நிலங்களை சுற்றி போடப்படும் மின்சார வேலிகளில் நேரடியான மின் இணைப்பு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பேட்டரி மூலம் மிதமான மின்சாரத்தை கொடுக்க வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.