குன்னூரில் விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை

நீலகிரி : குன்னூரில் விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி : குன்னூரில் விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த வறட்சியின் காரணமாக, வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காமல் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கு படையெடுத்து வருகின்றன. குறிப்பாக, காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.



குன்னூர் அருகே பாலாடா, கோலானிமட்டம் குடியிருப்பு பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் கேரட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு உள்ளனர். இதில், கேரட் பயிர் தற்போது நன்கு வளர்ந்து உள்ளது.

இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமைகள் கூட்டம் கோலானிமட்டம் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் அடிக்கடி புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள கேரட், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். எனவே, காட்டெருமை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...