கோவையில் தொழில்நுட்ப ஜவுளித்தொழில் தேசிய முதலீட்டாளர் மாநாடு : மத்திய ஜவுளித்துறை செயலாளர் தொடங்கி வைத்தார்

கோவை : தொழில்நுட்ப ஜவுளித்தொழிலில் உள்ள வாய்ப்புகள், தொழில் துவங்கும் முறைகள் பற்றிய தொழில்நுட்ப ஜவுளித்தொழில் தேசிய முதலீட்டாளர் மாநாடு கோவையில் நேற்று நடந்தது.

கோவை : தொழில்நுட்ப ஜவுளித்தொழிலில் உள்ள வாய்ப்புகள், தொழில் துவங்கும் முறைகள் பற்றிய தொழில்நுட்ப ஜவுளித்தொழில் தேசிய முதலீட்டாளர் மாநாடு கோவையில் நேற்று நடந்தது.

உலகின் பல்வேறு பகுதிகளில் அதிக வாய்ப்புகள் நிறைந்த துறையாக தொழில்நுட்ப ஜவுளி கருதப்படுகிறது. இந்தியாவில் ஜவுளி தொழில்நுட்ப தொழில் நிறுனங்கள் மந்தமாகவே உள்ளன. இந்த தொழிலின் எதிர்கால வளர்ச்சியை தீர்மானிக்கும் உற்பத்தி திறனிலும், நுகர்விலும் பின்தங்கிய நிலையில் உள்ளன. இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில், தொழில்நுட்ப ஜவுளியில் உள்ள வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்திய தொழில்நுட்ப ஜவுளி தொழில் சங்கம் (ITTA), இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பு, தென்னிந்திய மில்கள் சங்கம் (ITF) மற்றும் தென்னிந்திய மில்கள் சங்கம் ((SIMA) ஆகியவை இணைந்து கோவையில் முதல்முறையாக தேசிய அளவிலான தொழில்நுட்ப ஜவுளித்தொழிலில் முதலாவது மாநாட்டினை (NICTT 2019) நடத்தியது.

இம்மாநாட்டினை, மத்திய ஜவுளித்துறை செயலாளர் ராகவேந்திரா சிங் துவக்கி வைத்தார். மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (NICTT 2019) லைப் சயின்ஸ் பொது இயக்குனர் ஏ.கே சிங் கவுரவ விருந்தினராக பங்கேற்றார். தொழில் முனைதலுக்குப் பெயர்பெற்ற நாட்டில், தமிழகத்தின் மேற்கு பகுதியாக மட்டுமின்றி, இந்த மண்டலத்திலும் கூட கோவையைத் தவிர வேறு எந்த நகரமும் இதற்கு இணையாகாது. தொழில் முனைவோருக்கு எந்த கல்வியை அளிக்க வேண்டும் என்பதையும், எதில் கூடாது என்பதையும் ஜவுளித்தொழில்நுட்பத்தில் இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்த மாநாடு விளக்கியது.

கருத்தரங்கில், பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப ஜவுளி ஆலோசகர்கள், ஆராய்ச்சி நிறுவனத்தினர், அரசின் சிறப்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. விரும்பிய தொழில் திட்டங்களில் நடைமுறை சாத்தியம், அதன் சந்தை வாய்ப்புகள், எப்படி தொழில் துவங்குவது போன்றவை குறித்து விளக்கமாக பேசினர்.

இந்திய தொழில்நுட்ப ஜவுளி சங்கத்தின் தலைவர் கே.எஸ் சுந்தர் ராமன் பேசுகையில், "ஏற்கனவே ஜவுளித்தொழில்நுட்ப தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட, புதிய தொழில்முனைவோர் வர வேண்டும் என என எதிர்பார்க்கிறோம். இத்துறையில் 10 மடங்கு உற்பத்தியை பெருக்கினால் மட்டுமே சர்வதேச அளவில் நம்மால் போட்டியிட முடியும்," என்றார்.

இந்திய டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறுகையில், "புதிய தொழில், வணிக வாய்ப்புகளை அணுகுவதில் நமது மண்டலம் முன்னணியில் உள்ளது. இந்த மாநாடு, தென்னிந்திய அளவிலான பல தொழில் நிறுனங்கள் தொழில்நுட்ப ஜவுளித்தொழில் துறையில் ஊக்கம் தரும் என நம்புகிறேன். நடைமுறை அணுகுமுறையைக் கொண்ட இந்த நிகழ்ச்சியில், தொழில் முனைவோர் இந்த தொழில் மற்றும் வாய்ப்புகள் குறித்து பல முதல் முறையான தகவல்களை பெற்றுள்ளனர்," என்றார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தில் இருந்து 140 ஜவுளித்தொழில் முனைவோர் பங்கேற்றனர். மேலும், இந்திய தொழில்நுட்ப ஜவுளி சங்கத்தினர், இந்த மண்டலத்தில் புதியதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல்களை அளித்தனர். நிகழ்ச்சியில், சர்வதேச அளவில் ஜப்பான் நிஸ்ஸான்கென், மெஸ்சி பிராங்பர்ட் பேச்சாளர்கள் பங்கேற்றனர். இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை போன்ற அரசு துறைகளும் பங்கேற்றன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...