கோவையில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 3 லட்சம் நிதியுதவி

கோவை : பன்னிமடை அருகே பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 3 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.


கோவை : பன்னிமடை அருகே பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 3 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. 

கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியில் கடந்த மாதம் 25-ம் தேதி 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில், சந்தோஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய வாய்ப்பிருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்களும், பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், இந்த சம்பவத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மவுனம் காத்து வந்தனர். 

இந்த நிலையில், பன்னிமடை கிராமத்தைச் சேர்ந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய அவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவனுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் கூறினார்.

 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...