கோவை : கோவையில் படித்த இளைஞர்களைக் குறிவைத்து வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடிகள் செய்யும் கும்பல்கள் அதிகரித்து வருகிறது. இவர்கள் குறிப்பாக இளைஞர்களை குறிவைத்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். மேலும், இந்த மோசடி நிறுவனங்கள் இளைஞர்களிடம் வேலை வாங்கி தருவதாகக் கூறி லட்சக்கணக்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு, பல்வேறு வெளிநாடுகளுக்கு அனுப்பி விடுகின்றனர். ஆனால், பல்வேறு எதிர்பார்ப்போடு வெளிநாடுகளுக்கு செல்லும் இளைஞர்களுக்கு அங்கு போதிய சம்பளம் கொடுப்பதில்லை. அதேபோல, கொத்தடிமைகள் போல 15 - 16 மணிநேரம் என வேலை பார்த்து வருகின்றனர். இப்படி ஏமாறும் இளைஞர்கள் புகார் அளித்தாலும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என தொடர்ச்சியாக பொதுமக்கள் மத்தியில் புகார்கள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், கோவை காந்திபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'ஆக்சன் ஸ்கூல் ஆப் மாரிடைம் அண்ட் லாஜிஸ்டிக்ஸ்' என்ற தனியார் நிறுவனம், கோவை மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் இளைஞர்களை குறிவைத்து வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பெரும் மோசடி செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதில், பாதிக்கப்பட்டவர்கள் தனி நபராக புகார் கொடுக்க வந்தால், காவல் நிலையங்களில் புகார் மனுக்களை பெற்றுக்கொள்வதில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுவதாக, கோவை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து புகார் அளிக்க வந்த பா.ம.க. இளைஞர் அணியின் பொறுப்பாளர் அசோக் ஸ்ரீநிதி கூறியதாவது ;- கோவையில் செயல்படும் மோசடி நிறுவனங்கள் படித்த இளைஞர்களைக் குறி வைத்து மோசடி செய்து வருகிறது. இது தொடர்பான புகார் அளிக்கச் சென்றால் காவல்துறையில் புகார் மனுக்கள் பெறப்படுவதில்லை. மோசடி புகார்களை விசாரிக்க தனிப்படை, புகார் அளிக்க தனி தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ் அப் எண் போன்றவற்றை காவல்துறை பொதுமக்களின் தேவைக்காக அமைத்து தர வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக புகார் செய்ய முடியும், என தெரிவித்தார்.