சூலூர் இடைத்தேர்தல் : சமூக நீதிக்கட்சி வேட்பாளர் கணேசன் வேட்புமனு தாக்கல்

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக சமூக நீதிக்கட்சியின் வேட்பாளர் கணேசன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக சமூக நீதிக்கட்சியின் வேட்பாளர் கணேசன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.



சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், சமூக நீதிக்கட்சி சார்பில் போட்டியிடும் கணேசன் என்பவர் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான பாலகிருஷ்ணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன், அக்கட்சியில் அமைப்பு செயலாளராக உள்ளார். சமூக நீதிக்கட்சி பதிவு செய்யப்படாத காரணத்தினால், சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

இதையடுத்து, சுயேட்சை வேட்பாளர் கணேசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது :- சூலூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே தனது முதல் குறிக்கோள். தேர்தலில் வெற்றி பெற்றால் தட்கோ கடன் பெற்று தருதல், வீடில்லா ஏழை மக்களுக்கு வீடு கட்டி தருதல், பஞ்சமி நிலங்கள் மீட்பு உள்ளிட்ட பணிகளை செய்வேன். அருந்ததிய மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும், அருந்ததிய மக்களுக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுக்கும் வகையிலும் தேர்தலில் போட்டியிடுகிறேன், என அவர் கூறினார்.

சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...