கோவை : மேட்டுப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானையின் உடலை, நெல்லித்துறை வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு வனத்துறையினர் உணவாக்கினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள நெல்லித்துறை வனப்பகுதி எல்லையருகே உள்ள பாக்கு தோப்பிற்குள் நேற்று அதிகாலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று உணவு தேடி புகுந்துள்ளது. அப்போது, அங்கிருந்த ஒரு பாக்கு மரத்தை முறித்து சாய்க்க முயன்ற போது, மரத்தின் அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது மரம் சாய்ந்துள்ளது. இதனால், உயரழுத்த மின் கம்பிகள் மீது மரம் உரசிய போது, யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது. மேலும், மின்கம்பமும் சரிந்து யானையின் அருகே மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால், மின் அதிர்ச்சி தாளாமல் யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து தகவல் கிடைக்கப் பெற்றதும், சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டுப்பாளையம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மின்கம்பம் அருகே உயரமாக நீண்டு வளரும் தன்மையுடைய பாக்கு மரம் வளர்க்கப்பட்டுள்ளதும், நள்ளிரவில் இப்பகுதியில் பெய்த சாரல் மழையால் மரத்தில் இருந்த ஈரம் காரணமாகவும், மரம் சாய்க்கப்பட்ட போது யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பாக்குத்தோப்பு உரிமையாளரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, உயிரிழந்த காட்டு யானையின் உடல் வனத்துறையின் கால்நடை மருத்துவரின் பிரேத செய்யப்பட்டது. பின்னர், யானையின் உடலை, கழுகுகள் அதிகம் வசிக்கக் கூடிய சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனவிலங்குகளுக்கு உணவாக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால், யானையின் உடலை மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு எடுத்துச் செல்ல நீண்ட தூரமாகும். எனவே, தொழில்நுட்ப காரணங்களைக் காட்டி, நெல்லித்துறை வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு யானையின் உடலை உணவாக்க திட்டமிடப்பட்டது.
"மின்சாரம் தாக்கிய உயிரிழந்த காட்டு யானையின் உடலை உண்ணும் வனவிலங்குகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. ஆந்திராக்ஸ் உள்ளிட்ட தொற்று வியாதிகளும் வராது," என்கிறார் கால்நடை மருத்துவர் என்.எஸ். மனோகர்.
கடந்த ஒரு ஆண்டிற்குள் மேட்டுப்பாளையத்தில் மட்டும் 3 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. இதன்மூலம், வனப்பகுதிகளில் யானைகளின் ஆண், பெண் விகிதம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
"வனத்துறையினரும், மின்சார வாரியத்துறையும் இணைந்து வனப்பகுதிகளுக்கு நடுவே செல்லும் மின்சார கேபிள்களை ஆய்வு செய்ய வேண்டும். மிகவும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மின்சார வயர்களை உயரமாக செல்லும் வகையில் அமைக்க வேண்டும். மேலும், தேனியில் ஏற்பட்ட மாபெரும் பேரிடருக்கு முன்னதாக, இலகுவாக இருக்கும் வயர்களை இறுக்கமாக அமைக்க வேண்டும்," என இந்திய ராப்டர்களின் (பறவை) பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் எஸ். சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு 15 அடி உயரத்திற்கு மேலாக மின்கம்பிகள் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க மின்சார வாரியத்துறை அதிகாரிகள் உறுதியளித்ததாக மாவட்ட வனத்துறை அதிகாரி டி. வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.