நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் சாலையின் குறுக்கே ராட்சத மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு சூறை காற்றுடன் கனமழை பெய்தது. இதில், பல்வேறு இடங்களில் சாலையின் குறுக்கே ராட்சத மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பந்தலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாட்டை இணைக்கும் முக்கிய சாலையில் மரம் விழுந்து சுமார் 2 மணிநேர போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலமாக வீசிய சூறை காற்றில் பல ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. மேலும், கொளப்பள்ளி பகுதியில் வீட்டின் மீது மரம் விழுந்துள்ளது. இரவு நேரம் என்பதால் மீட்பு பணிளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறையினர் இணைந்து சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியினை மேற்கொண்டனர். இன்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.