கோவையில் தொழிலதிபர் கொலை வழக்கு : முக்கிய குற்றவாளியான முன்னாள் காவலர் உட்பட 5 பேரை தேடும் பணியில் தனிப்படை போலீசார்

கோவை : கோவையில் கடந்த 18ஆம் தேதி தொழில் முன்விரோதம் காரணமாக தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான முன்னாள் காவலர் உட்பட 5 பேரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை : கோவையில் கடந்த 18ஆம் தேதி தொழில் முன்விரோதம் காரணமாக தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான முன்னாள் காவலர் உட்பட 5 பேரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை மீனா எஸ்டேட்டை சேர்ந்தவர் பரந்தாமன்(36). இவர், போத்தனூரில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். மேலும், பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலும் செய்து வந்தார். தொழில் முன் விரோதம் காரணமாக, பரந்தாமன் நாடாளுமன்ற தேர்தல் நாளான கடந்த 18-ம் தேதி, மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக போத்தனூர் போலீஸார், சின்னியம்பாளையம் கோல்டு வின்ஸ் பகுதியைச்சேர்ந்த கார் ஒர்க் ஷாப் உரிமையாளர் ரவி (30), சென்னையைச் சேர்ந்த மருதுபாண்டி (30), திருப்பூரை சேர்ந்த நவீன் (25), சென்னையைச் சேர்ந்த லோகேஸ், பெரம்பலூரைச் சேர்ந்த டேவிட், கும்பகோணத்தை சேர்ந்த கார்த்திக் ஆகிய 6 பேரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும், இக்கொலை வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளியான இடையர்பாளையத்தை சேர்ந்த கார்த்தி உட்பட மேலும் 5 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், கார்த்திக் தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் சில ஆண்டுகள் காவலராக பணியாற்றி, பின்னர் கார் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டதால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இவர் மீது திருட்டு, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், தனிப்படை போலீசார் கார்த்தி மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வீசி தேடி வருகின்றனர். மிக விரைவில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...