கோவை : மதுரையில் வாக்கு பெட்டி இயந்திரம் வைக்கும் இடத்திற்கு சென்றதால், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் தாசில்தாருக்கு தி.மு.க. துணை நிற்கும் என கோவையில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
கோவை : மதுரையில் வாக்கு பெட்டி இயந்திரம் வைக்கும் இடத்திற்கு சென்றதால், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் தாசில்தாருக்கு தி.மு.க. துணை நிற்கும் என கோவையில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
கோவை நவ இந்தியா அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தி.மு.க. கோவை மாவட்ட வழக்கறிஞர் தண்டபாணியின் இல்ல திருமண விழாவில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- நடைபெற இருக்கின்ற 4 சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்தக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு தேர்தல் ஆணைய உதவியோடு ஆளுங்கட்சியினர் தடுக்க முயற்சி செய்தார்கள். சுதந்திர இந்தியாவில் தேர்தல் நடத்துவதற்கு நீதிமன்ற மூலம் அனுமதி வாங்கியது தி.மு.க. தான். குறுக்கு வழியில் என்ன செய்யலாம் என்று ஆளுங்கட்சியினர் நினைக்கிறார்கள். அதற்கு உதராணம் மதுரை சம்பவம்தான். ஆளுங்கட்சியினர் எவ்வளவு பணம் செலவழித்தாலும் சூலூரிலும் தி.மு.க. தான் வெற்றி பெறும். குறிப்பாக, எடப்பாடிக்கும், மோடிக்கு எதிரான அலை நாடாளுமன்றத்தில் எப்படி இருந்ததோ, அதே அலை இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. கலைஞர் மறைவிற்க்கு பிறகு ஸ்டாலினை தலைவராக ஏற்று கட்டுகோப்பாக செயல்படுகிறோம். வேட்பாளர் தேர்வில் அ.தி.மு.க.வில் தான் கருத்து வேறுபாடு உள்ளது. குறிப்பாக, வேலுமணி, தங்கமணிக்கு தான் கருத்து வேறுபாடு இருக்கிறது. எந்தவித மாற்று கருத்துமில்லாமலும், கருத்து வேறுபாடு இல்லாமலும் வேட்பாளரை நிறுத்தியுள்ளோம்.

குற்றம்சாட்டப்பட்ட தாசில்தார் சம்பூர்ணம் நல்ல அதிகாரி தான். வேண்டுமென்றே அவர் பலி வாங்க பாட்டிருக்கிறார். 10 அல்லது 15 பேரை மதுரை மாவட்ட ஆட்சியர் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால், யாரும் ஒத்துக்கொள்ளவில்லை என தற்போது தகவல் வந்துள்ளது. தாசில்தார் சம்பூரணம் உதவி ஆட்சியராக பதவி உயர்வு பெற இருக்கின்ற நிலையில், அவர் பலிவாங்க பட்டிருக்கிறார். அவருக்கு தி.மு.க. பாதுகாப்பாக நிற்கும். இந்த விஷயத்தில் ஊடகம்தான் துணை நிற்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் அளவுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் ஆளுங்கட்சியினர் காலம் தாழ்த்துகிறார்கள். கூட்டுறவு சங்க தேர்தலை முறைகேடாக நடத்தியவரைத் தான் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக பதவி உயர்வு கொடுத்திருக்கிறார்கள். இந்த தேர்தல் முடிந்த பிறகு, அதற்கு ஒரு கச்சேரி இருக்கிறது, என்றார்.
மேலும், உள்ளாட்சி தேர்தலை நடக்க விடாமல் தடுத்தது தி.மு.க.தான் என்ற தமிழிசை குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, தமிழிசை பொய் சொல்வதற்காகவே குமரி ஆனந்தனுக்கு மகளாக பிறந்திருக்கிறார் என்று தெரிவித்தார்.