கோவை : கோவையில் நேற்று இரவு மது போதையில் பேருந்தை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியம் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை : கோவையில் நேற்று இரவு மது போதையில் பேருந்தை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியம் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நேற்று இரவு TN39 N 0012 என்ற எண் கொண்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான கோவை - திருச்சி செல்லக்கூடிய பேருந்தை சுப்ரமணியம் என்பவர் ஓட்டி வந்தார். பல்வேறு பகுதிகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேருந்து தறிகெட்டு ஓடியதால், சந்தேகமடைந்த பயணிகள், ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து, ஒண்டிப்புதூர் - இருகூர் பிரிவு அருகே பேருந்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பேருந்து ஓட்டுநர் தள்ளாடியபடி இருந்த சம்பவம் பேருந்தில் பயணித்த பயணிகளை கோபத்தில் ஆழ்த்தியது.

கோவை அரசு மருத்துவமனை நிறுத்தம் அருகே இருந்து ஒண்டிப்புதூர் வரை தாறுமாறாக ஓடியது. இப்படி சென்ற பேருந்தானது பல்வேறு பகுதிகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் தரிகெட்டு ஓடியது. இதைதொடர்ந்து, சுமார் 8.30 மணி அளவில் இந்த பேருந்தானது, ஒண்டிப்புதூர் மேம்பாலம் அருகே திடீரென உரசியது. இதை சுதாரித்துக் கொண்ட முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி, சந்தேகத்தின் அடிப்படையில் சக பயணிகளிடம் ஓட்டுநர் மது போதையில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, ஒன்று சேர்ந்த சகபயணிகள் ஓட்டுநர் மது போதையில் இருப்பதை உறுதிப்படுத்தி பேருந்தை ஒண்டிப்புதூர் - இருகூர் பிரிவு அருகே நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பேருந்து ஓட்டுனர் தள்ளாடியபடி இருந்த சம்பவம் பேருந்தில் பயணித்த பயணிகளை கோபத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், மது போதையில் பேருந்தை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியம் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து தமிழ்நாடு அரசு திருப்பூர் கோட்ட மேலாண் இயக்குனர் முத்துகிருஷ்ணன் கூறியதாவது :- நேற்று மதுபோதையில் அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநர் வாகனத்தை இயக்கியது தொடர்பான புகார் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. அவரை நாங்கள் முதற்கட்டமாக பணியிடை நீக்கம் செய்துள்ளோம். பின்னர் அவரிடம் இதற்கு முன் மதுபோதையில் வாகனம் ஓட்டி உள்ளாரா..? என்பது குறித்து விசாரணை மேற்கொள்வோம். அவர் மீது தொடர்ச்சியான புகார்கள் இருக்கும் பட்சத்தில், பணி நீக்கமும் செய்ய முன்வருவோம்.

மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பணிக்கு செல்லும் முன் மதுபோதையில் உள்ளனரா என்பதை அதிகாரிகள் சோதனை செய்கிறோம். அதையும் மீறி மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம், என தெரிவித்தார்.
இதைதொடர்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மதுபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பாக கண்காணிக்க உத்தரவு பிறப்புக்கப்பட்டுள்ளது.