கோவை : பீளமேடு அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் இருந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றவர்கள் அங்கு இருந்த நாக பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை : பீளமேடு அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் இருந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றவர்கள் அங்கு இருந்த நாக பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பீளமேடு அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் ஐ.டி.பி.ஐ. ஏ.டி.எம். உள்ளது. இதில், இன்று நாக பாம்பு ஒன்று புகுந்திருந்தது. அப்போது, அந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், என்ன செய்வது என்று செய்வதறியாது பணம் எடுக்க வந்தவர்கள் திகைத்து நின்றனர். தொடர்ந்து, இது குறித்து பீளமேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், அங்கு வந்த போலீசார், பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் அளித்தனர்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த பாம்பு பிடிக்கும் நபர், ஏ.டி.எம் இயந்திரம் பின்புறம் இருந்த பாம்பை பிடித்து அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இதனால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். பிடிபட்ட பாம்பு வன பகுதியில் விடப்பட்டது. பணம் எடுக்க வந்த இடத்தில் பாம்பு இருந்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.