கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் ஏ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.

சின்னியம்பாளையத்தில் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், இடைத்தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.வ. வேலு தலைமையில் நடைபெற்றது. இதில், ஏ.வ.வேலு பேசியதாவது :- பென்னாகரம் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் பணியாற்றினோம். களத்தில் நின்று பணியாற்றுபவர்கள் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் வார்டு கழக செயலாளர்கள். வெற்றி பெற்றால் அந்த பெருமை அவர்களுக்கே சேரும். சிறப்பாக பணிகள் செய்ய உதவுவதற்காகவே நாங்கள் வந்துள்ளோம். தற்போது, சூலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி பல்வேறு பொறுப்புகளில் இருந்தாலும், மாணவ பருவத்தில் இருந்தே போர் குணம் கொண்டு வெற்றிகளைப் பெற்றவர்.

வேட்பாளரை தலைமை அறிவித்தவுடன் வெற்றி பெற வேண்டும் என வேகம் இருக்க வேண்டும். இங்கும் தொண்டர்கள் மத்தியில் வேகம் உள்ளது. தொண்டர்களுக்கு மத்தியில் தான் இருப்பேன். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது இலக்காக இருக்க வேண்டும். 28-ந்தேதி மாலையில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கும் மேல் கலந்துகொள்ள வேண்டும். முதல் நிகழ்ச்சியே பிரம்மாண்டத்துடன் நடைபெற வேண்டும். எதிரியை வீழ்த்தும் விதமாக அது அமைய வேண்டும். சூலூர் பகுதியை 41 பகுதிகளாக பிரித்துள்ளோம். இதில், அனைவருக்கும் பொறுப்புள்ளது. 41 பொறுப்பாளர்களும் பணிகள் சிறப்பாக செயலாற்ற வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்பதையே மனதில் வைத்துக்கொண்டு பணியாற்ற வேண்டும்.
இளைஞரணி, மகளிரணி, தொழிலாளர் அணி, மாணவரணி என தனித்தனியாக வாக்குகள் சேகரிக்க உள்ளோம். கொங்கு மண்டல தோல்வி தொடர்பாக ஆய்வுகள் நடத்தியதில், சாதிவாரியாக 2-வது இடத்தில் அருந்ததியின மக்கள் இருப்பதும், அருந்ததியின மக்கள் 15 சதவீதம் தான் தி.மு.க.விற்கு வாக்களித்ததும் தெரிய வந்துள்ளது. இதனால், 43 தொகுதியில் குறைவாக வாக்குகள் பெற்றதும் தெரியவந்துள்ளது. அருந்ததியின மக்கள் பல்வேறு பயன்களை கலைஞரால் தான் பெற்றனர் என்பதை உணர்கிறோம். அவர்களின் முன்னேற்றத்திற்கு தி.மு.க. அதிக கவனம் கொண்டு உள்ளது. அதை அந்த மக்களிடத்தில் எடுத்து செல்ல வேண்டும்.
அருந்ததியர் மாநாட்டில் கூட தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், தீரன் சின்னமலையின் போர்ப்படை தளபதியான பொல்லானுக்கு மணி மண்டபம் கட்டி சிலை வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை மக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்கும் போது கொண்டு செல்ல வேண்டும். மேலும், இந்த தேர்தலில் சிறப்பாக பணியாற்றி கொங்கு மண்டலத்தை வெற்றி பெற வைக்க வேண்டும், என்றார்.
முன்னதாக, சூலூர் இடைத்தேர்தல் வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமி பேசுகையில், "22 ஆண்டுகளாக மாவட்ட கழகத்தின் பொறுப்பாளராக இருந்து அனைவருடனும் நன்கு பழகியவன். சாதாரண பொறுப்பிலிருந்து சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர், அமைச்சர் என பல்வேறு பொறுப்புகள் வகித்தவன். கொங்குநாட்டின் அமைச்சர்கள் ஊழல்களை செய்து கோடிகளை குவித்து வருகின்றனர். அவர்களை ஒரு கை பார்க்கத்தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தன்னை தேர்ந்தெடுத்துள்ளார்.
கொங்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும். மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர் என்பதை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கண்டுகொண்டேன். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஊராட்சி சபையில் தான் கலந்துகொண்டபோது, அரசு மீது மக்கள் கொண்ட கொதிப்பைக் காண முடிந்தது," என்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், எம்.எம்.ஏ.வுமான நா. கார்த்திக், புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர். இராமசந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் மு. கண்ணப்பன், வழக்கறிஞர் பரந்தாமன் மற்றும் மாவட்ட, ஒன்றிய பகுதி கழக, வார்டு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.