நீலகிரி : உதகையில் உடல் தகனம் செய்யும் போது வெளியேறும் புகையின் காரணமாக, குழந்தைகள் மற்றும் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுவதாகக் கூறி எரியூட்டும் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உதகை அருகே உள்ள கேர்ன்ஹில் மஞ்சனகொரை பகுதியில் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உடல் தகனம் செய்யும் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. எரிக்கும் இடம் மிகவும் தாழ்வான பகுதியில் கட்டப்பட்டுள்ளதால், அதில் இருந்து வெளியேறும் புகை அருகில் இருக்கும் பள்ளிகள் மற்றும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

மேலும், இங்கு அமைக்கப்பட்டுள்ள மயானத்தின் புகைப்போக்கி சரியான முறையில் இயங்குவதில்லை என்றும், இந்த அறையில் உள்ள ஜன்னல் வழியாக புகை வெளியே வருவதால், பலருக்கும் சுவாசப் பிரச்சினை ஏற்படுவதாக ஊர்மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். எனவே, உடனடியாக இந்த எரியூட்டும் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.