4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு : சூலூரில் கந்தசாமி போட்டி

கோவை : சூலூர் உள்பட 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கோவை : சூலூர் உள்பட 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட நேற்று முன்தினம் விருப்பமனு பெறப்பட்டது. விருப்பமனு அளித்தவர்களிடம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அன்றைய தினமே, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடந்தது. 

நேற்று அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், இன்று அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அரவக்குறிச்சி தொகுதியில் வி.வி.செந்தில்நாதன், ஒட்டப்பிடாரம் தொகுதியில் கே. மோகன், சூலூர் தொகுதியில் கந்தசாமி, திருப்பரங்குன்றம் தொகுதியில் எஸ். முனியாண்டி ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...