கோவை : கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் பழுதான ஒரு சில சி.சி.டி.வி. கேமராக்களை சீர்செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர் ராசாமணி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
கோவை : கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் பழுதான ஒரு சில சி.சி.டி.வி. கேமராக்களை சீர்செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர் ராசாமணி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு பொறியல் கல்லூரியில் கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு சில கண்காணிப்பு கேமராக்கள் இயங்கவில்லை என எழுந்த புகாரை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கடந்த 1 மணி நேரமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஒரு சில சி.சி.டி.வி. கேமராக்கள் இயங்கவில்லை. சில இடங்களில் கேமரா வயர்கள் பழுதடைந்து உள்ளதால், இதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு மணி நேரமாக ஆட்சியர் முன்னிலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இது விரைவில் சரி செய்யப்படும் எனவும், பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.