கோவை : பூளுவாம்பட்டியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வரும் நிலையில், அதனை சரிசெய்ய வேண்டிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
கோவை : பூளுவாம்பட்டியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வரும் நிலையில், அதனை சரிசெய்ய வேண்டிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனவே, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதால், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிறுவாணி அருகே பூளுவாம்பட்டியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அத்திக்கடவு குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.

இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால், இந்தப் புகார் மீது கோவை மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.