நீலகிரி : கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய பெய்த கனமழையினால், வீடு, வாழை மரங்கள் சேதமாகின.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான முதுமலை, ஓவேலி, தேவர்சோலை, மரப்பாலம், நாடுகாணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த காற்றுடன் கூடிய மழை காரணமாக, மரப்பாலத்தை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்தில் 1,000-க்கும் அதிகமான வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. காட்டு ராஜா என்பவரது வீட்டின் மீது மரம் விழுந்ததில் வீடு முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது.