கோவை : மேட்டுப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கியதில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள நெல்லித்துறை வனப்பகுதி எல்லையருகே உள்ள இரானி மகால் காரருக்கு சொந்தமான ஆறு ஏக்கர் பாக்கு தோப்பு உள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று உணவு தேடி இந்த தோப்புக்குள் புகுந்துள்ளது. அங்கிருந்த ஒரு பாக்கு மரத்தை முறித்து சாய்க்க முயன்ற போது, மரத்தின் அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது மரம் சாய்ந்துள்ளது. இதனால், உயரழுத்த மின் கம்பிகள் மீது மரம் உரசிய போது, யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது. மேலும், மின்கம்பமும் சரிந்து யானையின் அருகே மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனால், மின் அதிர்ச்சி தாளாமல் யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து தகவல் கிடைக்க பெற்றதும், சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டுப்பாளையம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மின்கம்பம் அருகே உயரமாக நீண்டு வளரும் தன்மையுடைய பாக்கு மரம் வளர்க்கப்பட்டுள்ளதும், நள்ளிரவில் இப்பகுதியில் பெய்த சாரல் மழையால் மரத்தில் இருந்த ஈரம் காரணமாகவும், மரம் சாய்க்கப்பட்ட போது யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. தொடர்புடைய பாக்குத்தோப்பு உரிமையாளரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. வனத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் யானைகளுக்கு பிடித்தமான வாழை, பாக்கு, கரும்பு உள்ளிட்டவைகளை பயிரிடாமல் மஞ்சள், அவரை, மிளகாய் போன்றவற்றை பயிரிட வனத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.