Exclusive: கோவையில் மதுபோதையில் அரசு பேருந்தை தாறுமாறாக ஓட்டிய சம்பவம் : பேருந்தை சிறைபிடித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் பயணிகள் வாக்குவாதம்

கோவை : கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை மதுபோதையில் ஓட்டுநர் இயக்கியதால், பேருந்தை சிறைபிடித்து ஓட்டுநரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


கோவை : கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை மதுபோதையில் ஓட்டுநர் இயக்கியதால், பேருந்தை சிறைபிடித்து ஓட்டுநரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் ஓட்டுனர்கள் இரவு நேரங்களில் மது போதையில் வாகனங்களை இயக்கி வருவதாக தொடர்ச்சியாக புகார்கள் இருந்து வந்தது. அதேபோல, வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகளும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளும் பேருந்து ஓட்டுனர்களின் செயல்பாடுகளை கண்காணிக்காததால் சில ஓட்டுநர்கள் மதுபோதையில் அதி வேகமாக வாகனங்களை ஓட்டி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு TN39 N 0012 என்ற எண் கொண்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான கோவை - திருச்சி செல்லக்கூடிய பேருந்தானது, கோவை அரசு மருத்துவமனை நிறுத்தம் அருகே இருந்து ஒண்டிப்புதூர் வரை தாறுமாறாக ஓடியது. 



இப்படி சென்ற பேருந்தானது பல்வேறு பகுதிகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் தரிகெட்டு ஓடியது. இதைதொடர்ந்து, சுமார் 8.30 மணி அளவில் இந்த பேருந்தானது, ஒண்டிப்புதூர் மேம்பாலம் அருகே திடீரென உரசியது. இதை சுதாரித்துக் கொண்ட முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி, சந்தேகத்தின் அடிப்படையில் சக பயணிகளிடம் ஓட்டுநர் மது போதையில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, ஒன்று சேர்ந்த சகபயணிகள் ஓட்டுநர் மது போதையில் இருப்பதை உறுதிப்படுத்தி பேருந்தை ஒண்டிப்புதூர் - இருகூர் பிரிவு அருகே நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பேருந்து ஓட்டுனர் தள்ளாடியபடி இருந்த சம்பவம் பேருந்தில் பயணித்த பயணிகளை கோபத்தில் ஆழ்த்தியது. 

இதுகுறித்து பயணி ஒருவர் கூறியதாவது :- பல உயிர்களை பத்திரமாக அழைத்துச் செல்ல வேண்டிய ஓட்டுநர்கள் இப்படி மது போதையில் பல உயிர்களை பலி எடுக்கும் வகையில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. நாங்கள் இன்று சுதாரித்துக்கொண்டு பேருந்தை நிறுத்தவில்லை என்றால், பிணமாகத்தான் போயிருப்போம். போக்குவரத்து கழகமும், வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகளும் இரவு நேரங்களில் இதுபோன்று ஓட்டுநர்கள் மதுபோதையில் வாகனங்களை இயக்குகின்றனரா..? என கண்காணிக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால், இது போன்ற செயல்பாடுகள் தொடர்ந்து வருகிறது. அதேபோல, மதுபோதையில் பேருந்தை இயக்கிய இந்த ஓட்டுனரை பணிநீக்கம் செய்தால் தான் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது, என ஆதங்கத்துடன் பேசினார்.

இதையடுத்து, தகவலறிந்து வந்த சிங்காநல்லூர் போலீசார், பேருந்து ஓட்டுனரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில், இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பதும், இவர் காங்கேயம் போக்குவரத்து கழக எல்லைக்குட்பட்டவர் என்பதும் தெரியவந்தது. பின்னர், போலீசார் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததுடன், பேருந்து ஓட்டுனர் மீது மதுபோதையில் வாகனத்தை ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.



கோவையில் மதுபோதையில் பேருந்தை ஓட்டிய ஓட்டுனரை பொதுமக்கள் சுதாரித்துக்கொண்டு பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், போக்குவரத்து கழகமும் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகளும் காவல் துறையும் இணைந்து இரவு நேரங்களில் பேருந்துகளை கண்காணித்து மதுபோதையில் இயக்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், உயிர் இழப்புகள் ஏற்படும் என்பதே நிதர்சனம்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...