கோவையில் 100 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் : மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

கோவை : கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 100 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை : கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 100 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் கவர்கள், பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை அடுத்து, கோவை மாநகராட்சி சார்பாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி நகர்நல அலுவலர் சந்தோஷ் குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள், காந்திபுரம், வடவள்ளி, சத்தி ரோடு, ஆர்.எஸ். புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதில், கடைகள் மற்றும் ஒட்டல்களில் இருந்து 100 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பிளாஸ்டிக் கவர்கள் வைத்திருந்த உரிமையாளர்களுக்கு ரூ. 26,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...