கோவை : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வரும் பக்தர்களின் வசதிக்காக போடப்படும் தற்காலிக கடைகளால் வெள்ளியங்கிரி மலையின் இயற்கை சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரியில் சுயம்புலிங்கமாக அவதாரம் எடுத்துள்ள ஈசனை வழிபடுவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக, தற்காலிக கடைகள் அனுமதி பெற்று போடப்பட்டு வருகின்றன. வெள்ளியங்கிரி மலையில் சுமார் 5.5 கி.மீ தொலைவிற்கு சுமார் 10 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்காக குடிநீர் பாட்டில்கள் உள்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் இந்தக் கடைகளை பெரும்பாலும் பழங்குடியின மக்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தக் கடைகளின் உரிமையாளர்கள், மீதமாகும் உணவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் போன்ற கழிவுகளை வனப்பகுதியில் உள்ள புற்களின் மத்தியில் எரிந்துவிட்டுச் செல்கின்றனர். மேலும், தன்னார்வலர்கள் மற்றும் வன அதிகாரிகள் பக்தர்களிடம் கடுமையாக சோதனைக்குட்படுத்தி அனுப்புகின்றனர். தண்ணீர் பாட்டிலை தவிர்த்து வேறு எந்தவிதமான பிளாஸ்டிக் பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதி மறுக்கின்றனர்.

இந்தப் பகுதியானது புலி, சிறுத்தை, மான், பறவைகள் மற்றும் சிறு பாலூட்டிகளின் நடமாட்டம் இருப்பதால், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்களிடம் தீவிர சோதனை நடத்தும் அதிகாரிகள், கடைக்காரர்களைக் கண்டுகொள்வதில்லை என பக்தர்கள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியின் போது மட்டும் 2 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில், குறிப்பாக, தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் இருப்பதைக் கண்டு தன்னார்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், கடந்த ஆண்டு இதில் பாதியளவு குப்பைகள்தான் சேகரிக்கப்பட்டது.
"கடைகளுக்கு அருகே முறையான குப்பைத் தொட்டிகள் வைக்கப்படவில்லை. எனவே, அவர்கள் தங்களது சவுகரியம் போல குப்பைகளை எரிந்து விட்டு வருகின்றனர். இது கடினமாக உழைக்கும் தன்னார்வலர்களுக்கு தடையாக இருந்தது," என்கிறார் பக்தர் ஒருவர்.
இதையடுத்து, இது தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.