கோவை : கோவையில் முதல்முறையாக இசைஞானி இளையராஜா பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 9-ம் தேதி நடைபெற உள்ளது.
கோவை : கோவையில் முதல்முறையாக இசைஞானி இளையராஜா பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 9-ம் தேதி நடைபெற உள்ளது.
இளையராஜாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோட்டில் 'எப்போதும் ராஜா' எனும் பெயரில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் கோவை ரசிகர்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் வகையில், அருண் மீடியாஸ் மற்றும் மஹம் என்டர்பிரைசஸ் சார்பில் வரும் ஜூன் மாதம் 9-ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் இளையராஜா தலைமையில் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இது குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் அருண் மற்றும் ஒய்.ஜி. மதுவந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் பேசியதாவது :- ஈரோட்டில் 'எப்போதும் ராஜா' எனும் பெயரில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சிக்குப் பிறகு, அடுத்தபடியாக கோவையில் 'ராஜாதி ராஜா' என்ற இன்னிசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில், திரைப்பட முன்னணி பாடகர்கள் மனோ, சித்ரா, உஷா உதூப் உட்பட பல்வேறு முன்னணி பாடகர்கள் மற்றும் பாடகிகள் கலந்து கொண்டு பாட உள்ளனர். குறிப்பாக, 30 பேர் கொண்ட ஹங்கேரி சிம்பொனி இசைக்குழுவினர்கள் இதில் கலந்து கொண்டு இன்னிசை விருந்தை கோவை வாழ் மக்களுக்கு அளிக்க உள்ளனர், எனத் தெரிவித்தனர்.