கோவை : துடியலூர் - கணுவாய் இடையிலான ராஜவாய்க்காலை குப்பைகளிடம் இருந்து மீட்டெடுக்கும் பணியில் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை மறுசீரமைப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், பெரும்பாலானோர் தங்களது பொறுப்புகளையும், கடமைகளையும் மறந்து செயல்பட்டு வருகின்றனர். உதாரணமாக, கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள துடியலூர் பகுதியில் உள்ள ராஜவாய்க்காலை பொதுமக்கள் குப்பை கிடங்காக பயன்படுத்தி வரும் சம்பவம்தான்.

துடியலூர் - கணுவாய் வரையிலான 350 அடி அகலம் கொண்ட ராஜவாய்க்கால் பிளாஸ்டிக் கழிவுகள், மதுபாட்டில்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளின் கிடங்காக மாறியுள்ளது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 'இயற்கை மீட்டெடுப்பு' தொண்டு நிறுவன தன்னார்வலர்களுடன், சின்னவேடம்பட்டி குளங்கள் மீட்டெடுப்பு குழுவினர், கோவை மாநகராட்சி ஆகியவை இணைந்து குப்பைக் கூலமாக மாறியுள்ள ராஜவாய்க்காலை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.
"நாங்கள் 2 வாரத்திற்கு முன்பே இந்தப் பகுதியில் தூய்மைப் பணியை தொடங்கினோம். அதன் தொடர்ச்சியாக நேற்றும் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டோம். 3 நாட்கள் தூய்மைப் பணியை செய்தோம். பொறுப்பற்ற மக்களால் இந்தக் கால்வாய் குப்பைக் கூலமாக மாறியிருந்தது," என்றார் இயற்கை மீட்டெடுப்பு தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி. சதீஷ் பாலாஜி.
இந்தக் கால்வாயில் பெரும்பாலும் அருகே உள்ள உணவகங்களின் உணவு கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக்குகள், உடைந்த செராமிக்ஸ், டைல்ஸ், ஃபைபர் கிளாஸ் போன்ற பொருட்களே கிடந்தன. உள்ளூர் மக்களுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக, இந்தக் குழுவினர் எந்தவித இயந்திரங்களையும் பயன்படுத்தாமல், அவர்களது கரங்களினாலேயே தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.
"இந்தத் தூய்மைப் பணியின் தொடக்கத்தில் பெரும் இடர்பாடுகள் இருந்தன. இருப்பினும், நாங்கள் எந்தவிதமான இயந்திரங்களையும் பயன்படுத்தவில்லை. ஏனெனில், இதனைப் பார்க்கும் போதாவது, சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்த நினைப்பவர்கள் இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்பதற்காகத்தான். வரும் மே மாதம் இறுதிக்குள் இந்த தூய்மைப் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். கோடை மழையினால் உருவாகும் தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல முடியும்," என்கிறார் பாலாஜி.