கோவை : கோவையில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது பெய்து கோடை மழையினால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை : கோவையில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது பெய்து கோடை மழையினால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 2 நாட்களாக கோவை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இரண்டு மாதங்களுக்கு மேலாக பொதுமக்களை வாட்டி வைத்த வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில், கோவை, நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு குறிப்பிட்ட இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.