சூலூர் இடைத்தேர்தல் : கோமாளி வேடமணிந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்

கோவை : சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கோமாளி வேடமணிந்து வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை : சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கோமாளி வேடமணிந்து வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 



சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது. முதல் நபராக கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த தேர்தல் மன்னன் நூர் முகமது வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவர் கோமாளி வேடமணிந்தபடி சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது, சாலையில் சென்றவர்கள், சாலையோர கடைகளில் நின்றவர்களிடம் கை குலுக்கி ஆதரவு கேட்டார். இதையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலரான பாலகிருஷ்ணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். 



இதுவரை 31 முறை தேர்தல்களில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள நூர்முகமது, 32 முறையாக சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இதேபோல, கள் இயக்கம் சார்பில் கதிரேசன் என்பவர் தேர்தல் நடத்தும் அதிகாரியான பாலகிருஷ்ணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...