நூற்பாலை இயந்திரத்தில் சிக்கி விரல்கள் துண்டான 4 வயது மகனுக்கு உதவக் கோரி பெற்றோர் கண்ணீர் மல்க மனு

கோவை : நூற்பாலை இயந்திரத்தில் கைவிட்டதால் விரல்கள் துண்டான தங்களது 4 வயது மகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க உதவிட கோரி பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

கோவை : நூற்பாலை இயந்திரத்தில் கைவிட்டதால் விரல்கள் துண்டான தங்களது 4 வயது மகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க உதவிட கோரி பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த முருகேசன், ஹேமா தம்பதிகள். கோவை சோமனூர் பகுதியில் உள்ள நூற்பாலை ஒன்றில் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். கடந்த 6-ம் தேதி இவர்களது 4 வயது மகன் ரித்தீஷ் பாண்டி மில்லில் விளையாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த இயந்திரத்தில் கையை விட்டுள்ளார். இதில், பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மில் நிர்வாகத்தினர் சிறுவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை தாமதமான நிலையில், சிறுவனின் இடது கையில் இருந்த 4 விரல்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 



இதனிடையே, மருத்துவ சிகிச்சைக்காக 10 ஆயிரம் ரூபாயை பெற்றோருக்கு முன்பணமாக கொடுத்த மில் நிர்வாகம், மேற்கொண்டு பணம் கொடுக்க முடியாது என கைவிரித்து விட்டதாகத் தெரிகிறது. இதனால், குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

"கூலித்தொழிலாளிகளான நாங்கள் கையில் உள்ள பொருட்களை அடகு வைத்து, குழந்தைக்கு தற்போது வரை சிகிச்சை அளித்து வருகிறோம். மேலும், சிகிச்சை உதவிகள் கிடைத்தால் தங்கள் மகனுக்கு செயற்கை கை பொறுத்த முடியும். இதன்மூலம், தனது மகனின் எதிர்காலம் காப்பாற்ற முடியும்," என கண்ணீர் மல்க அந்தப் பெற்றோர் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...