தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை : மாநில தேர்தல் ஆணையம்

டெல்லி : உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

டெல்லி : உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சிப் பொறுப்புகள் கடந்த 2016 அக்டோபர் 24-ம் தேதி முதல் காலியாக உள்ளது. எனவே, உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரி கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இருப்பது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையம், தலைமை செயலருக்கு நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டார். பின்னர், இந்த வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, 4 வாரம் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. 

பின்னர், உச்சநீதிமன்ற பதிவாளர் முன் கடந்த ஜனவரி 21-ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் பி. வினோத் கண்ணா கூடுதல் அவகாசம் கோரினார். இதை தொடர்ந்து 4 வாரம் கூடுதல் அவகாசம் வழங்கிய பதிவாளர், இனி அவகாசம் வழங்கப்படமாட்டாது என உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையின் போது, உள்ளாட்சி தேர்தல் எப்போது என திட்டவட்டமாக தேதி வாரியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...