கோவையில் மூளைசாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் 6 பேருக்கு தானம்

கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மூளைசாவடைந்த 25 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம் செய்யப்பட்டது.


கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மூளைசாவடைந்த 25 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம் செய்யப்பட்டது.

கடந்த 13ம் தேதி மனோஜ் குமார் (25) என்பவர் வேலையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவரது வாகனம் விபத்துக்குள்ளாகியது. இதில், அவருக்குத் தலையில் பலத்த அடிபட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நெருக்கடி நிலைக் கண்காணிப்பு பிரிவுக் குழுவும், நரம்பியல் மருத்துவர்களும் இணைந்து மிகத் தீவிரமாக முயற்சி எடுத்தும் கூட, மூளையில் அடிபட்டிருந்த காரணத்தால் அவர் குணமடைவதில் பின்னடைவு ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்தார். மூளையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றிக் கண்டறியும் 'அப்னோ டெஸ்ட்' பரிசோதனைகளைத் தொடர்ந்து மேற்கொண்ட மருத்துவர் குழு இறுதியில் அவரது மூளைச்சாவை உறுதி செய்தனர். 

மனோஜ்குமாரின் உடல் நிலையை அறிந்த அவரது குடும்பத்தினர் உறுப்பு தானம் வழங்க முன்வந்தனர். அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகியவற்றை ஆறு பயனாளிகளுக்குத் தானமாக வழங்க முன்வந்தனர். இதன்மூலம், பயனாளிகளின் வாழ்வில் நன்மை செய்ய முடியும் என்பதால் உறுப்பு தானத்துக்கான தமிழக அமைப்பின்(TRANSTAN) அனுமதி பெறப்பட்டு ராமகிருஷ்ணா மருத்துவமனை நோயாளி ஒருவருக்கு அவரது ஒரு சிறுநீரகமும் மற்ற உறுப்புகள் அரசு விதிகளின்படி அமைந்த பயனாளிகளுக்கும் பொருத்தப்பட்டன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...