கோவை : குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கல்லார் அரசு தோட்டகலை பண்ணையில் பலாப்பழ சீசன் தொடங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணை உள்ளது. இங்கு மா, பலா, எலுமிச்சை மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளை சேர்ந்த ரம்பூட்டான், மங்குஸ்தான், லிட்சி போன்ற பழ வகைகளும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது இந்த பழப் பண்ணையில் பலா பழங்களின் சீசன் தொடங்கியுள்ளது. மொத்தம் 61 மரங்கள் உள்ள நிலையில், 50க்கும் மேற்பட்ட மரங்களில் பலா பழங்கள் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குகின்றன. ஒப்பந்த முறையில் பலா மரங்கள் ஏலம் விடப்பட்டு, பின்னர் மரங்களில் இருந்து பழங்களை பரித்து விற்பனை செய்ய தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது. கடந்தாண்டை போலவே, கிலோ பத்து ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக தெரிவிக்கும் நிர்வாகம், விரைவில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.