சோமனூர் பகுதியில் விசைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை : அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமார் வாக்குறுதி

கோவை : சோமனூர் பகுதியில் விசைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென சூலூர் இடைத்தேர்தல் அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

கோவை : சோமனூர் பகுதியில் விசைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென சூலூர் இடைத்தேர்தல் அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளராக சுகுமார் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தென்னம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் அ.ம.மு.க. ஆலோசணை கூட்டம் நடைபெற்றது. இதில், கோவை, திருப்பூர், நிலகிரி ஆகிய பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, சூலூர் தொகுதிக்கான அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது :- சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றி பெறும். சூலூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். வெற்றி பெற்றால் சூலூர் பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பேன். 

சோமனூர் விசைத்தறி பூங்கா, சூலூர் குளங்கள், தூர்வாருதல், வணிக வரி அலுவலகம் அமைத்தல், அரசு மருத்துவமனை மேம்பாடு உள்ளிட்டவற்றிக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன், என அவர் தெரிவித்தார்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள சமத்தூரை சேர்ந்த சுகுமார், 2009 முதல் 2014 வரை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். தற்போது, அ.ம.மு.க. கோவை மாவட்ட புறநகர் மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...