கோவை : கோவை மாவட்டம் மாங்கரை அருகே காட்டெருமை தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

தடாகம் வனப்பகுதிக்குட்பட்ட வனப்பகுதியில் கடந்த மாதம் 29-ம் தேதி பி. சின்னராஜ் (52) என்பவர் கால்நடை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த காட்டெருமை, சின்னராஜை கடுமையாக தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த அவர், கங்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று சின்னராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் மாங்கரையில் உள்ள வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.