கோவை : கோவை மாவட்டம் க.க.சாவடி அருகே மேற்கு வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் உடம்பில் பல்வேறு காயங்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

க.க. சாவடி அருகே உள்ள முட்புதரில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் க.க. சாவடி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தூக்கில் தொங்கியவர் மேற்கு வங்க மாநிலம், பிர்பாரா மாவட்டத்தை சேர்ந்த ஸ்வேரன் மார்க்ஸ் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல, உயிரிழந்தவரின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதால், யாராவது அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா..? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், இந்த இளைஞர் எதற்காக கோவை வந்துள்ளார் எங்கு தங்கியுள்ளார் என்பது தொடர்பாக போலீசார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின்பேரில், க.க. சாவடி காவல்நிலைய ஆய்வாளர் மனோஜ் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.