நடைபெற இருக்கும் சூலூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.ம.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.பி. சுகுமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
நடைபெற இருக்கும் சூலூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.ம.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.பி. சுகுமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 22 தொகுதிகளில், முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலுடன், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. எஞ்சிய காலியாக உள்ள சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற மே 19-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. 29-ம் தேதி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 30-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.மே 2-ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மே 23ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில், சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான அ.ம.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்கள் விபரம் :
திருப்பரங்குன்றம் : முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன்
ஒட்டப்பிடாரம் : முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ்
அரவக்குறிச்சி : சாகும் ஹமீது (முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை எதிர்த்து)
சூலூர் : முன்னாள் எம்.பி. சுகுமார்.