தேர்தல் தினத்தன்று தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் : 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த கோவை மாநகர போலீசார்

கோவையில் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை 48 மணி நேரத்தில் கைது செய்த கோவை மாநகர போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோவை : நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கோவை மாநகர போலீசார் 48 மணி நேரத்தில் கைது செய்தனர்.

கடந்த 18-ம் தேதி கோவை மாநகர் போத்தனூர் காவல் எல்லைக்குட்பட்ட நபி நகரில் வெளிநாட்டு உயர் ரக கார்களின் உதிரி பாகங்கள் மற்றும் சர்வீஸ் சென்டர் நடத்தி வரும் பரந்தராமன் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மேலும், கொலை செய்த நபர்கள் பரந்தராமன் அணிந்திருந்த செயின், மோதிரம் மற்றும் பெண் ஊழியர்கள் அணிந்திருந்த நகைகள், அலுவலகத்தில் இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின்பேரில், 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்த சம்வவம்  தொடர்பாக உதவி ஆணையாளர் செட்ரிக் மனுவேல் தலைமையிலான போலீசார்

தீவிர விசாரணை நடத்தினர். அதில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய் சின்னியம்பாளையம் அருகே உள்ள கோல்டுவின்ஸ்  பகுதியைச் சேர்ந்த ரவி (30) என்பவர் அவரது நண்பர்களான சென்னையைச் சேர்ந்த மருதுபாண்டி (30) திருப்பூரைச் சேர்ந்த நவீன் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார், செல்போன், அரிவாள் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, நடத்திய விசாரணையில் கூலிப்படையினர் 3 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் கூலிப்படை தலைவன் கார்த்திக் உள்ளிட்ட சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் கைதான ரவி போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது :- நான் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறேன். இந்த நிலையில், எனது தொழிலில் போட்டியாக இருக்கும் பரந்தராமன் அடிக்கடி தொழில் ரீதியாக பல தொல்லைகள் கொடுத்து வந்தார். இதனால், எனது தொழில் நஷ்டம் அடைந்தது. இது தொடர்பாக எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பரந்தாமன் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். மேலும், அவர் என்னை கொலை செய்ய திட்டம் தீட்டி வருவதாக எனக்கு தகவல் கிடைத்தது. அவர் கொலை செய்வதற்கு முன் முந்திக் கொள்வதற்காக, நான் கூலிப்படை வைத்து கொலை செய்தேன், என தெரிவித்தார்.

கோவையில் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை 48 மணி நேரத்தில் கைது செய்த கோவை மாநகர போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...