வெப்பநிலை அதிகரிப்பால் தேனீர் விற்பனை குறைவு :தேயிலை ஏலத்திலும் விலை சரிவு

நீலகிரி : வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக தேனீர் விற்பனை குறைந்துள்ளதால், தேயிலை ஏலத்திலும் விலை குறைந்து காணப்படுவதாக தேயிலை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி : வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக தேனீர் விற்பனை குறைந்துள்ளதால், தேயிலை ஏலத்திலும் விலை குறைந்து காணப்படுவதாக தேயிலை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். 

நீலகிரியின் பொருளாதாரத்தில் தேயிலைத்தூள் உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. தேயிலை விவசாயத்தை நம்பி 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளும், தொழிலாளர்களும் உள்ளனர். இதுதவிர, 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.



தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், குன்னூர் ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைன் மூலம் ஏலம் நடத்தப்படுகிறது.

தற்போது, கோடைகாலம் என்பதால் குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்து, தேனீர் விற்பனை மற்றும் விலை குறைவது வழக்கம் என்பதால், தேயிலை ஏலத்தில் சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ. 240-ம், ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.251 எனவும், சராசரி விலையாக இலை ரகம் சாதாரண வகை கிலோவுக்கு ரூ. 85 முதல் ரூ. 90 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ. 112 முதல் ரூ. 120 வரையும் விற்பனையாகிறது. 

கோடைகாலத்தில் குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்து தேனீர் விற்பனை குறைவது வழக்கம் என்பதால், விலையும் குறைந்துள்ளதாகவும், இந்த விலை குறைவு வரும் ஜூன் மாதம் வரை இருக்க வாய்ப்பிருப்பதாக தேயிலை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...