திருப்பூர் : திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருப்பூர் : திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருப்பூர் மாநகரில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலையில் மேகமூட்டம் நிலவியதோடு, காற்றும் வேகமாக வீசத்தொடங்கியது. இந்த நிலையில், திருப்பூர் மாநகரின் கரட்டாங்காடு, நல்லூரில், செட்டிபாளையம், முத்தனம்பளையம், ராயபுரம், ஆண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இருப்பினும், கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.