இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையின் கோவை பெண்கள் அமைப்பின் புதிய தலைவர் தேர்வு

கோவை : 2019-20-ம் ஆண்டிற்கான கோவை இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை பெண்கள் அமைப்பின் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


கோவை : 2019-20-ம் ஆண்டிற்கான கோவை இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை பெண்கள் அமைப்பின் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 



கோவை இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை பெண்கள் அமைப்பின் நிர்வாகிகள் நியமன நிகழ்ச்சி கோவையில் இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் முன்னாள் செயலாளர் சரளா கோபாலன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கோவை இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையின் பெண்கள் அமைப்பின் தலைவராக பூனம் பஃப்னா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மவுன்ட் ஹவுசிங் மற்றும் இன்ஃபிராஸ்டிரக்ஷர் நிறுவனத்தின் தலைவராகவும், டிரீம் சொலிட்டயர் என்ற நகை நிறுவனத்தின் புரமோட்டாராகவும் இருக்கிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக கோவை இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை பெண்கள் அமைப்பின் துணை தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். 



பின்னர், நிகழ்ச்சியில் 'எம்பவர் வித்இன் அன்ட் பியான்ட்' என்ற இந்த ஆண்டுக்கான கருபொருளை பூனம் பஃப்னா அறிமுகப்படுத்தினார். 

"கோவை இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை பெண்கள் அமைப்பின் மூலம் பெண்கள் அதிகாரம் பல்வேறு கோணங்களில் முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பெண்களின் திறமைகள், அனுபவம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றை வெளிக்கொண்டு வரும் வகையில், ஊக்கம் கொடுத்தால், நாட்டின் பொருளாதாரம் மேலோங்கும். கோவை இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை பெண்கள் அமைப்பு பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையை மாற்றுவதில் முக்கிய பங்காற்றியுள்ளது," என்றார் கோவை இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை பெண்கள் அமைப்பின் தலைவர் பூனம் பஃப்னா. 

தொடர்ந்து சிறப்பு விருந்தினர் மத்திய அரசின் முன்னாள் செயலாளர் சரளா கோபாலன் பேசுகையில், "கண்ணாடி கூரை மற்றும் சுவர்களுக்குப் பின்னால் பெண்கள் ஒடுக்கி வைக்கப்பட்டுள்ளனர். அந்த கூரையையும், சுவர்களையும் தகர்த்தெறிந்தால் மட்டுமே அவர்களின் வலிமை என்ன என்பது தெரியும்," எனக் கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...