Exclusive : தேர்தல் விதிமுறைகள் அமலின் எதிரொலி : மே 23 வரை கோவையில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் ரத்து

கோவை : தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள காரணத்தினால், வரும் மே மாதம் 23-ம் தேதி வரை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் நடக்கும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை : தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள காரணத்தினால், வரும் மே மாதம் 23-ம் தேதி வரை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் நடக்கும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் காரணமாக தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்தது. இதனால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒரு மாத காலமாக மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறவில்லை. மக்களவை தேர்தல் முடிவு பெற்றாலும் தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. மே 23-ம் தேதி தான் வாக்குகள் எண்ணப்படும். மேலும், காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மே 23-ம் தேதி வரை திங்கட்கிழமைகளில் நடக்கும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறாது. தேர்தல் முடிவுகள் வெளியாகி தேர்தல் விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டால்தான், மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...