கோவை : கோவையில் குழந்தை தொழிலாளியாக இருந்த மாணவி, தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற்று, தற்போது வங்கி அதிகாரியாக வேண்டும் என்பதே தனது இலட்சியம் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 6 முதல் 14 வயதுடைய குழந்தைகள் அனைவருக்கும் அடிப்படை இலவச கல்வி என்பது கட்டாயம் என சட்டம் உள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, கடந்த 1988-ம் ஆண்டு தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. இதற்காக, சிறு வயதிலேயே பணிபுரிந்து வரும் குழந்தைகளுக்கு மறு வாழ்வு அளிக்கும் வகையில் மாவட்டந்தோறும் தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் (என்.சி.பி.எல்.) கீழ் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் உள்ள அந்தப் பள்ளிகளில் 9 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் பிள்ளையார்புரத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மா. குழந்தை தொழிலாளியாக இருந்த இவரை, தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டப் பள்ளியின் ஆசிரியர்களால் அடையாளம் காணப்பட்டு, பள்ளியில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து, 3 ஆண்டுகள் என்.சி.பி.எல். பள்ளியில் கல்வி பயின்ற அவர், பின்னர் மாநில அரசு பள்ளியில் படிப்பை தொடர்ந்தார். தொடர்ந்து, ஆசிரியர்கள் பயிற்சி பள்ளியில் 12-ம் வகுப்பை பயின்ற அவர், பொதுத்தேர்வில் 412 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ரேஷ்மா தனது 8 வயது முதல் நூல் பிரித்தெடுக்கும் பணியை செய்து வந்தார். பெண்கள் வீடுகளில் இருந்தே மேற்கொள்ளும் இந்தப் பணிக்கு நூல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து கம்பெனிகள் தொகை வழங்குகின்றனர். ரேஷ்மாவின் தந்தை தினக்கூலியாவார். இதனால், ரேஷ்மாவை அவரது பெற்றோர்கள் பள்ளியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் ரேஷ்மா, என்.சி.பி.எல். பள்ளியில் தனது கல்வியை தொடங்கி, தற்போது உயர்கல்வியில் 68 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
"நான் பி.காம்.(சி.ஏ) படிக்க விரும்புகிறேன். இதன்மூலம் வங்கித்துறையில் பணிக்கு சேர்ந்து, எனது குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டு செல்ல உதவிகரமாக இருக்கும்," என நம்பிக்கை தெரிவிக்கிறார் ரேஷ்மா
ரேஷ்மாவைப் போன்றே கோவை மற்றும் திருப்பூரில் ஏழு மாணவிகள் உள்பட 15 மாணவர்கள் என்.சி.பி.எல். பள்ளியில் கல்வி பயின்று, உயர்கல்வியை நிறைவு செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோனோர்களின் பெற்றோர்கள் தினக்கூலி என்பதால், பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க முடியாத நிலையில், என்.சி.பி.எல். பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
என்.சி.பி.எல். பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த திருப்பூரைச் சேர்ந்த ஆர். சரவணக்குமார் என்ற மாணவர், 12-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்துள்ள போதிலும், நீட் தேர்வில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக, ஒரு வருடம் பயிற்சி பெற்று, 2020-ல் நீட் தேர்வை சந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
"பொதுத்தேர்வில் என்னால் அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை. ஆனால், அடுத்த நீட் தேர்வு எழுதி வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக நான் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று கொண்டிருக்கிறேன். கடினமாக உழைத்து, நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பிற்கான இடத்தை பெறுவேன்," என்கிறார் ஆர். சரவணக்குமார்.
இது தொடர்பாக கோவை திட்ட இயக்குநர் டி. விஜயகுமார் கூறியதாவது :- கடினமான சூழல்களிலும் எங்களது மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மேலும் ஊக்கம் கொடுத்தால், அவர்கள் கல்லூரிகளிலும், வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்படுவார்கள். யாரேனும் உதவி செய்ய முன்வந்தால், கல்லூரிக்கு செல்லும் இந்த மாணவர்களுக்கு புதிய ஆடைகள் வாங்கி கொடுக்கலாம். அனைத்து மாணவர்களும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். குழந்தைகளின் படிப்பு செலவிற்காக அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள், என்றார்.